தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு - road accident in ramanathapuram

ராமநாதபுரம்: சத்திரக்குடி அருகே கர்நாடகா சுற்றுலா வேன்- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கீழக்கரையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

road accident
road accident

By

Published : Jan 24, 2021, 10:14 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிலர் ஆம்னி வேனில் இன்று(ஜன.24) காலை சென்னைக்கு புறப்பட்டனர். சத்திரக்குடி அருகே தபால் சாவடி பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வேன் நேருக்கு நேர் மோதியது.

இதில் கீழக்கரையைச் சேர்ந்த ஹாஜா செய்யது அகமது (60), அகமது ஹசன் (32), ரூபினா (58) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து சத்திரக்குடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மீனவர்களை தாக்கும் கேரள மீனவர்கள் - வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details