தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பள்ளி மாணவனை வெட்டிய வழக்கில் மூன்று பேர் கைது! - போலீசார் அதிரடி விசாரணை

சென்னை: பழிவாங்க வந்த நபர் இல்லாததால் மாணவர் உள்பட இருவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

chennai
chennai

By

Published : Sep 12, 2020, 9:14 AM IST

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). அவரது மகன் தியாகு (15) கடந்த 9ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் தியாகுவை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் காயமடைந்த தியாகு அலறியடித்து ஓடினார்.

இதனையடுத்து, தியாகுவின் தந்தை அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவியை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 2018ஆம் ஆண்டு ரவுடி புறா மணியை கொலைசெய்த வழக்கில் தொடர்புடையவரான சரத் என்பவரைக் கொலைசெய்வதற்காக புறா மணியின் 17 வயது சகோதரர், அவரது கூட்டாளிகள் கத்தியுடன் வந்தது தெரியவந்தது.

அந்த நேரத்தில் சரத் இல்லாததால் கோபத்தில் சரத்தின் சித்தி மகனான தியாகுவை வெட்டிச்சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், வளசரவாக்கத்தில் தலைமறைவாக இருந்த மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக சரத்தை கொலை செய்யவந்ததும், அவர் இல்லாததால் பள்ளி மாணவனை வெட்டிச் சென்றதும் தெரியவந்தது.

மேலும், இவர்களது ஆத்திரம் அடங்காததால் வடபழனி அம்பேத்கர் நகர் வழியாகச் சென்றபோது, தீபிகா என்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயினைப் பறிக்க முயன்றதாகவும், அப்போது தடுக்கவந்த அவரது நண்பரான கண்ணனை தலையில் வெட்டிவிட்டு அவர்கள் வீட்டிலிருந்த மணி பர்ஸ், மடிக்கணினி, 3 செல்போன்களைப் பறித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவனை கத்தியால் வெட்டும் நபர்கள்

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து தலைவர் 3 மாதங்களுக்கு இடைநீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details