தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

காங்கேயத்தில் கோர விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழப்பு! - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர் காங்கேயம் ஒலப்பாளையம் அருகே லாரியில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். சிறுவர், சிறுமி உள்பட மூவர் படுகாயமடைந்தனர்.

kangayam accident 3 death, thiruppur kangayam accident, விபத்துக்குள்ளான கார், திருப்பூர் விபத்து, thiruppur accident, thiruppur district news, திருப்பூர் மாவட்ட செய்திகள், திருப்பூர் கார் விபத்து
திருப்பூர் விபத்து

By

Published : Jan 9, 2021, 1:53 PM IST

திருப்பூர்:சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர், அண்ணா நகரைச் சேர்ந்த மயில்சாமி (39) குடும்பத்தினர் 6 பேர் காரில் புறப்பட்டு கும்பகோணம் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

விபத்துக்குள்ளான கார்

அதிகாலை 4.30 மணியளவில் வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது.

இதில், காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), உறவினர் கௌசல்யா (60) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான கார்

மயில்சாமி மகன் கௌதம் (13), மகள் ரம்யா (11), உறவினர் கலைவாணி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த அனைவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வெள்ளக்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கேயத்தில் நடந்த கோர விபத்து

ABOUT THE AUTHOR

...view details