வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சிகிராமத்தை சேர்ந்தவர் சேகர். ஆட்டோ ஓட்டுநரான இவர், புதுப்பேட்டை அருகே கொல்லகொட்டாய் கிராமத்திலுள்ள தனது மகள் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை! - investigation
வேலூர்: ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் பீரோவை உடைத்து 15 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

thirupattur
இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், சேகர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் அடையாள தெரியாத நபர்கள் கைவரிசை
வீடு திரும்பிய சேகர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கந்தலி காவல் நிலையத்தில் சேகர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொள்ளையடித்த நபர்களைத் தேடி வருகின்றனர்.