தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

இருதரப்பினருக்கு இடையே மோதல் - இளைஞருக்கு அரிவாள் வெட்டு - Thirukattupalli near wrestling 5 person arrested

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவரை அறிவாளால் வெட்டியது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thirukattupalli
thirukattupalli

By

Published : Jan 2, 2021, 10:42 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் நாகாச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த வினோத்குமார் (31) என்பவர், தனது நண்பர் நிமல் பிரசாந்துடன் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி தனியார் ஓட்டலில் சாப்பிட்ட பிறகு வெளியே வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், செந்தில், மருதுபாண்டி, பிரசாந்த், பிரவின், விஜய் ஆகியோர் வினோத்குமார், நிமல் பிரசாந்த் மீது மோதினர்.

இதை எதிர்த்து கேள்வி கேட்ட வினோத்குமாரை, அந்த கும்பல் அறிவாளால் தலை, கைகளில் வெட்டியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், செந்தில், பிரசாந்த், பிரவின், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.

அதேபோல், அலமேலு புரம்பூண்டி கள்ளர் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர், வினோத்குமார், நிமல் பிரசாந்த் இருவரும் தங்களை கட்டையால் தாக்கியதாக புகார் அளித்தார். அதன் பேரில், இருவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நிமல் பிரசாந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details