தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சமையல் கான்ட்ராக்டர் வீட்டில் ரூ.10 லட்சம், 25 சவரன் தங்க நகை கொள்ளை - 25 சவரன் தங்க நகை கொள்ளை

நாமக்கல்: திருச்செங்காடு அருகே சமையல் கான்ட்ராக்டர் வீட்டில் 10 லட்சம் ரூபாய் பணம், 25 சவரன் தங்க நகைகள் கொள்ளைபோனது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

theft
theft

By

Published : Nov 14, 2020, 2:32 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி (67). சமையல் கான்ட்ராக்டரான இவர், தனது மனைவி, மகன் விஜயசாரதி, மருமகளுடன் இங்கு வசித்துவருகிறார். இவர் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி இனிப்புப் பொருள்களைத் தயாரித்து தணியார் மண்டபத்தில் வியாபாரம் செய்வது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டும் தனியார் மண்டபம் ஒன்றில் ஸ்வீட் கடை வைத்தார். பண்டிகையின் கடைசி நாள் என்பதால் நேற்று (நவ. 13) மதியம் 12 மணிக்கு, வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வியாபாரத்தை கவனித்தார்.

இந்நிலையில், இதனைக் கவனித்த அடையாளம் தெரியாத நபர்கள், யாரும் இல்லாத நேரத்தில் பெரியசாமியின் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று நாள்கள் வியாபாரம் செய்த பணத்தை திருடிச் சென்றனர்.

வியாபாரம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த பெரியசாமியின் மகன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டும், பீரோ உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, உடனடியாக திருச்செங்கோடு நகர காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் உள்ளே சென்று நடத்திய விசாரணையில், பீரோவிலிருந்த 3 நாள் வியாபாரப்பணம் சுமார் 10 லட்ச ரூபாய் மற்றும் சுமார் 25 சவரன் தங்க நகைகள் ஆகியவை களவுபோனது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருச்செங்கோடு நகர காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி!

ABOUT THE AUTHOR

...view details