கன்னியாகுமரி: நாகர்கோவிலைக் கலக்கிய காசி மீதான மூன்றாவது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பது போல ஏமாற்றி நெருக்கமாக இருந்ததை ரகசிய படக்கருவிகள் கொண்டு படம் பிடித்த வழக்கில் 3ஆவது குற்றப்பத்திரிகை நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், திருமணமான பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்புகொண்டு காதலிப்பதுபோல் நடித்து, அவர்களோடு தனியறையில் நெருக்கமாக இருந்து ரகசிய படக்கருவிகள் மூலம் படம் பிடித்து, அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன.