அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் புகுந்து அலுமினியம் அச்சுகள் திருடிய வழக்கில், ஆவடியைச் சேர்ந்த ஆனந்த் ராஜ், முருகா, ராஜேஷ், அம்பத்தூரைச் சேர்ந்த பாபு, 17 சிறுவன் ஆகிய ஐந்து பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் பணம், 60 அலுமினிய அச்சுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காவல் நிலையத்திலிருந்து தப்பிய திருடர்கள்! - Crime incidents
சென்னை: திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் காவல் நிலையத்திலிருந்து தப்பிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிறுவன் மட்டும் நீதிமன்ற பிணையில் வெளியான நிலையில், எஞ்சிய நால்வரும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இன்று (நவ.07) அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில், நான்கு பேரும் காவல் நிலையத்திலிருந்து தப்பியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆசை வார்த்தைக் கூறி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ!