அமைந்தகரை, மேத்தா நகரில் காவல் துறையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் காவல் துறையினரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அந்த வாகனத்தை பின்தொடர்ந்து துரத்திச் சென்று, அந்நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், இவர் டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த ரகு(21) என்பதும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.
வாகன சோதனையில் சிக்கிய திருடர்; 10 சவரன் நகை பறிமுதல்! - aminjikarai
சென்னை: அமைந்தகரை பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
thief
இதையடுத்து ரகுவை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பல திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.