திருப்பூரில் 108 அவசர அழைப்புக்கு நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அழைத்த நபர், ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நள்ளிரவில் மாநகர் காவல் துறையினர், மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் 50-க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டனர். இரண்டு மணி நேர சோதனைக்குப் பிறகு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.