கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே பிரபல தனியார் உணவகம் ஒன்று உள்ளது. நேற்று (ஜன.02) இரவு, கணக்கு வழக்குகளை முடித்து விட்டு ஊழியர்கள் உணவகத்தை பூட்டி விட்டு சென்றனர். கடையில் இரவு காவலாளி அர்ஜூனன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், இரவு 12 மணியளவில் ஹோட்டலின் பின்பக்க கதவை உடைத்து கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், உணவகத்தின் லாக்கரை உடைத்து அதிலிருந்து, 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடுத்து சென்றனர்.