தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

உண்டியல் உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை - Theft of temple bills in Thiruvannamalai

திருவண்ணாமலை: அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை சக்தி விநாயகர் கோயிலில் திருட்டு
திருவண்ணாமலை சக்தி விநாயகர் கோயிலில் திருட்டு

By

Published : Oct 13, 2020, 4:25 PM IST

Updated : Oct 13, 2020, 4:30 PM IST

திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சக்தி விநாயகர் கோயில். ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த கோயில் அரசு உத்தரவுப்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த கோயிலில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்படும் உண்டியல் வருவாய் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ( அக் 12 ) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம்போல் கோயிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

திருவண்ணாமலை சக்தி விநாயகர் கோயிலில் திருட்டு

இதுகுறித்து அவர் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலில் இரண்டு மாத காலமாக உண்டியல் திறக்கப்படாமல் இருந்ததால் உண்டியலில் அதிக பணம் வந்திருக்கும் என்று பூசாரி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் செருப்பு, ஷூக்களை குறிவைத்துத் திருடும் கும்பல்!

Last Updated : Oct 13, 2020, 4:30 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details