தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை - அடையாளம் தெரியாத கும்பல் வெறிச்செயல் - ஐந்து பேர் கொண்ட கும்பல்

மதுரை: வில்லாபுரத்தில் வீட்டில் குடிநீர் போர்வெல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

murder
murder

By

Published : Oct 20, 2020, 5:29 PM IST

மதுரை வில்லாபுரத்தில் இளைஞர் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை ஆய்வாளர் பழனிகுமார், காவல் உதவி ஆணையாளர் திருமலைக்குமார், காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா வில்லாபுரம் கணக்குப்பிள்ளை தெருவில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் போர் போடுவதற்காக திருப்புவனம் தாலுக்கா முக்குடி பகுதியில் இருந்து பாரதி, நாராயணன், வீரகுமார் ஆகிய மூன்று பேரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று (அக்.20) காலை ஐந்து பேர் கொண்ட கும்பல் குணசேகரன் வீட்டில் நுழைந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த பாரதி (25) என்பவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

இறந்தவரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வு சோதனை மேற்கொள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தப்பியோடிய கொலை குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட பாரதி மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஊராட்சி மன்ற தலைவர் கடத்தப்பட்டதாக புகார் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details