கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த சின்ன கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). இவர் கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டில் இருந்த சிறுமியைக் கடத்திச் சென்று வெங்கடேஷ் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், கடந்த நவ. 16ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய வெங்கடேஷ் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, கடந்த மாதம் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.