தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

குளத்தில் மூழ்கிய நபர்... மீட்க முயன்ற இளைஞர்கள்... தோல்வியில் முடிந்த போராட்டம்! - The tragic death of a young man who drowned in the pool

நாகை: மயிலாடுதுறையில் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த வாலிபர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் நீந்திக் கொண்டிருந்த வாலிபர் மூழ்கி உயிரிழந்த சோகம்

By

Published : Nov 13, 2019, 11:14 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருப்பூர் குமரன் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுரு (26). இவர் அப்பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நீந்திச் சென்றுள்ளார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் நீந்த முடியாமல் சிவகுரு தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்பதைப் பார்த்த மக்கள் கூச்சலிட்டுள்ளனர்.

உடனடியாக அப்பகுதி இளைஞர்கள் குளத்தில் குதித்துக் காப்பாற்ற முயன்றனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு மிதவையின் உதவியுடன் சிவகுருவை தேடினர். ஆனால், அவரை மீட்க முடியாமல் தவித்தனர்.

குளத்தில் நீந்திக் கொண்டிருந்த வாலிபர் மூழ்கி உயிரிழந்த சோகம்

இந்நிலையில், குளத்தில் தேடிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவரான ரயிலடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் விடா முயற்சியுடன் குளத்தின் அடிப்பகுதி வரை மூழ்கிச் சென்று மயங்கிய நிலையிலிருந்த சிவகுருவை மீட்டுத் தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தார். பின்னர், அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இளைஞர்களின் விடா முயற்சி செய்தும் வாலிபர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க: குடும்பத் தகராறு காரணமாக வெவ்வேறு இடங்களில் மூவர் கொலை...!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details