திருச்சி மாவட்டம் தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது.!
திருச்சி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது, இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் செல்வமணியை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்படி செல்வமணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.