தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வெடிகுண்டு வீசிய ஆர்எஸ்எஸ் பிரமுகர் - கைது செய்த காவல் துறை - வெடிகுண்டு வீசிய ஆர்எஸ்எஸ் பிரமுகரை கைது செய்த தனிப்படை போலீசார்

கோவை: கண்ணூர் சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசியது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரை, கேரள தனிப்படை காவல் துறையினர் கோவையில் கைது செய்தனர்.

bomb blast RSS man
bomb blast RSS man

By

Published : Jan 23, 2020, 5:53 PM IST

கேரள மாநிலம் கண்ணூரில் கம்யூனிஸ்டுகளுக்கும் இந்து அமைப்புகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி அங்குள்ள சோதனைச்சாவடி மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குண்டு வீசினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது, தாக்குதல் நடத்தியவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரபேஷ் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கேரள தனிப்படை காவல் துறை பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த பிரபேஷை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஆர்எஸ்எஸ் அமைப்புக்குச் சொந்தமான மனோஜ் சேவா கேந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அப்பகுதியில் மோதலை உருவாக்க முயற்சித்து வெடிகுண்டை வீசியதாகவும், ஆனால் எதிர்பாராதவிதமாக சோதனைச் சாவடி மீது விழுந்தததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து தலச்சேரி நீதிமன்றத்தில் பிரபேஷை ஆஜர்படுத்திய போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருமணமாகாத விரக்தியில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details