நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா. மீன்பிடித் தொழில் செய்துவருகிறார். கடந்த 5ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தபோது முன்பக்க கதவை உடைத்து பீரோவிலிருந்த 67 சவரன் நகைகள், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
சீர்காழியில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு! - 2 crores
நாகை: சீர்காழி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் திருடுபோயுள்ளது.
crime
இளையராஜா இன்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள், பணம் திருடு போயுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து இளையராஜா புகார் அளித்ததன் பேரில் சீர்காழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.