ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கல்யாணசுந்தரனார் வீதியில் வெற்றி விநாயகர் திருக்கோயில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட அந்த கோயிலில் தொடர்ந்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த கோயிலில் தொடர்ந்து பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் ஐந்து நாள்களுக்கு முன் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழே வருவாய் பெறும் கோயில்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டதையடுத்து கடந்த சில நாள்களாக பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது. வழக்கம் போல, நேற்றிரவு (ஆகஸ்ட் 13) இரவு நேர பூஜையை முடித்த பூசாரி, கோயிலை பூட்டிச் சென்று விட்டு, இன்று (ஆகஸ்ட் 14) அதிகாலை பூஜைக்காக கோயிலை திறக்க வந்துள்ளார்.