தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்ஸோவில் கைது! - father arrest in villupuram

விழுப்புரம்: திருவெண்ணெய் நல்லூர் அருகே 9ஆம் வகுப்பு படிக்கும் மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

sexual abuse
sexual abuse

By

Published : Nov 22, 2020, 5:39 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த டி.எடையார் கிராமத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மகளை, தந்தையே கர்ப்பமாக்கி உள்ளார். இது தொடர்பாக, மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மரம் வெட்டும் கூலித் தொழில் செய்து வந்த அவர், மனைவி இல்லாத நேரத்தில் மதுபோதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு, மகளை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது, அந்த சிறுமி நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 9ஆம் வகுப்பு படிக்கும் மகளை தந்தை கர்ப்பமாக்கிய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details