வேலூர் மாவட்டம் விரிஞ்புரம் அடுத்த சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஞானசுந்தரம் என்பவரின் மனைவி சரஸ்வதி. இவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்தியை்க காட்டி மிரட்டி ஐந்து சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலி கொள்ளை - குற்றச் சம்பவங்கள்
வேலூர்: சத்தியமங்கலம் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஐந்து சவரன் தாலிச் சங்கலியை கொள்ளையடித்துள்ளனர்.
![கத்தியைக் காட்டி மிரட்டி தாலிச் சங்கிலி கொள்ளை சங்கிலி கொள்ளை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8918975-thumbnail-3x2-vlr.jpg)
சங்கிலி கொள்ளை
பின்னர் விரிஞ்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.