தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்ததாக காவல் துறையிக்கு ரகசிய தகவல் கிடைந்தது. அதன் அடிப்படையில் ஹைதராபாத் காவல் ஆணையர் தலைமையில் தனிக்குழு சோதனை நடத்தினர்.
அதில் செகந்திராபாத், கிழக்கு மாரெட்பள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்ததாக நிகில் ஷெனாய், பைஸ் மெவதி, மெரோஸ் கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 10 கிராம் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி எனப்படும் போதை மாத்திரைகள், 1.4 கிலோ போதை செடி(கஞ்சா), 1.4 கிலோ ஹாஷ் எண்ணெய், மூன்று செல்போன்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைபற்றப்பட்ட போதை பெருட்களின் மதிப்பு 10.18 என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யபட்டவர்கள் ஹைதராபாத்தில் உள்ள துக்காரம்கேட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்