உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவின் லொஹியபுல் (Lohiya pul) அருகில் உள்ள கால்வாயில் காதல் ஜோடி ஒன்று குதித்து தற்கொலைக்கு முயன்றது.
இதில், காதலி காவல் துறையினரால் மீட்கப்பட்டு அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.மறுநாள் தீயணைப்பு, மீட்பு படையினரின் தீவிர தேடலுக்குப்பின் ஃபரிதாபாத்தில் உள்ள கேரிபுல் (Kheri Pul) பகுதியில் காதலனின் உடல் மீட்கப்பட்டது.