தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள நெல்கட்டும்செவல் பச்சேரியைச் சேர்ந்தவர் குருசாமிபாண்டி. இவரது மனைவி வெள்ளத்தாய். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டிலேயே குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளத்தாய் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று (அக்.4) மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்த சக நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.