சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே மெய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் தங்கராஜ். இவர், குடிபோதையில் பள்ளிக்கு வருவது, பள்ளியிலேயே மது அருந்துவது என்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று (நவ.2) மது போதையில் பள்ளிக்கு வந்த தங்கராஜ், வெளியே விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரை அழைத்து, கராத்தே சொல்லி தருவதாகக் கூறி, வகுப்பறைக்கு அழைத்துச் சென்றார். வகுப்பறைக்குள் மாணவர்களை நிற்க வைத்து, காலால் உதைத்தும் கடுமையாகத் தாக்கியுள்ளார். அவரது தாக்குதலை தாங்க முடியாத மாணவர்கள் சத்தம்போட்டு கதறினர்.
மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குழந்தைகளை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். குடிபோதையில் தெரியாமல் செய்துவிட்டதாக தங்கராஜ் கூறியுள்ளார். குடிபோதையில் இருந்த தங்கராஜ் குறித்து தலைமையாசிரியரிடம் பெற்றோர்களும் பொதுமக்களும் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் காவல் துறையில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறை நடத்திய விசாரணையில் ஆசிரியர் தங்கராஜ் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை, உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலர் விஜயா, தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சரக்கு வேன் நிலை தடுமாறிய விபத்தில் 15 பேர் காயம்