சென்னை ஜமாலியாவைச் சேர்ந்தவர் அப்சல் தவ்கீன். இவர் தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி ஜமாலியா ஸ்டேட் பேங்க் அருகே நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் அப்சலின் செல்ஃபோனை பறித்து தாக்கியுள்ளனர். அப்சல் செல்ஃபோனை கேட்டு அவர்களுடன் வாக்குவாதம் செய்யவே அந்த மூன்று பேரும் அப்சலின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அப்சல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓட்டேரியில் கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கி செல்ஃபோன் பறிப்பு!
சென்னை: ஓட்டேரியில் ஸ்டேட் பேங்க் அருகே நடந்து சென்ற அப்சல் என்ற இளைஞரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி செல்ஃபோனை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு மணலியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் அவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த செல்வகுமார், அருண் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வியாசர்பாடி, செம்பியம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அப்சலை தாக்கி செல்ஃபோனை பறித்த கும்பல்களும் இவர்கள்தான் என்று தெரியவந்ததால் மணலி போலீசார் அவர்களை ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு லேப்-டாப், நான்கு செல்ஃபோன்கள், இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.