களியக்காவிளை சோதனைச்சாவடியில் காவல் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் ஜனவரி 8ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். வில்சனை சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய இவர்கள் இருவரையும் காவல் துறையினர் 10 நாள் காவலில் எடுத்து விசாரித்துவருகிறார்கள். கடந்த இரண்டு நாள்களில் வில்சன் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கியை எர்ணாகுளம் கழிவுநீர் ஓடையிலிருந்தும், கத்தியை திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியிலிருந்தும் கைப்பற்றினர்.
வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்!
இன்று கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநில காவல் துறையினரும் நாகர்கோவில் நேசமணி நகர் வந்து இவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கிய நிலையில் கொலையாளிகள் இருவரும் வில்சனை கொலை செய்தது எப்படி? என்பதை நடித்துக் காட்டி உட்படுத்தப்பட்டுள்ளனர்.
எஸ்.ஐ. வில்சனை கொலைசெய்தது குறித்து நடித்துக்காட்டிய கொலையாளிகள் இதற்காக இருவரையும் இன்று பிற்பகல் காவல் துறையினர் களியக்காவிளை அழைத்துச் சென்று மார்க்கெட் ரோடு சோதனைச்சாவடிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் எப்படி வில்சனை சுட்டோம், கத்தியால் குத்தினோம், எந்த வழியாக வந்தோம், எங்கு ஒடினோம் என அவர்களிடம் நடித்துக்காட்டினர். இதை வைத்து காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.