தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் கொள்ளை: 3 கிலோ வெள்ளி, 1.80 லட்சம் ரொக்கம்! - 3 கிலோ வெள்ளி, 1.80 லட்சம் ரொக்கம்

ராமநாதபுரம்: யானைக்கால் வீதியில் மசாலா ஏஜென்சி நடத்தி வரும் நபரின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் 1.80 லட்சம் ரூபாய் ரொக்கம், 3 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

robbery
robbery

By

Published : Dec 7, 2020, 1:37 PM IST

ராமநாதபுரம் யானைக்கல் வீதியைச் சேர்ந்தவர், ரங்கராஜன் (32). இவர் மசாலா ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை (டிச.5) அன்று திருச்சியில் நடைபெற்ற உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இன்று(டிச.7) காலை வீடு திரும்பினார்.

வீட்டின் முன் கதவும் நிலைக் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பதறிய ரங்கராஜன், உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டினுள் சென்று பார்த்தார். அதில், மசாலா ஏஜென்சி மூலம் சென்ற வாரம் வசூல் செய்யப்பட்டு வைத்திருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளியிலான குத்துவிளக்கு உள்ளிட்ட மூன்று கிலோ எடையுள்ள பூஜைப் பொருள்கள் மற்றும் 12 கிராம் தங்கத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் கொள்ளை

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பஜார் காவல் துறையினர், உடனடியாக மோப்ப நாய் ஜூலி உதவியுடன் கொள்ளையர்கள் சென்ற வழித்தடத்தை ஆராய்ந்தனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பீரோ மற்றும் கதவுகளில் உள்ள தடயங்களை ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை நீடிக்கும்: அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details