துபாயில் இருந்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இன்று திருச்சி விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் 8.5 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
துபாயில் இருந்து கடத்தல்! - 8.5 கிலோ தங்கம் பறிமுதல்! - திருச்சி விமான நிலையம்
திருச்சி: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 8.5 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
airport
இது தொடர்பாக 10 பயணிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு ரூ.4.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் ரூ.118 கோடி ஜிஎஸ்டி மோசடி- 2 பேர் கைது!