சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளிடம், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கடலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 152 கிராம் எடை கொண்ட ரூ.7.65 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதேபோல், துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சோதனையிட்டதில், நாகை மாவட்டம் பழையாறை சேர்ந்த முகமது சாதிக் என்பவர், தனது பேண்ட் பாக்கெட்டில் 1,128 கிராம் எடை கொண்ட ரூ.56.61 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.