காஞ்சிபுரம்:தேமுதிக ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த தேமுதிக ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகர் என்பவரை நேற்றிரவு (செப். 04) ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் கொலை செய்ய முயற்சி செய்தனர்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் ராஜசேகர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிகாரணை காவல் துறையினர் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிய பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அருள்(28), அருண்குமார்,(27), திருவான்மியூரை சேர்ந்த விக்னேஷ்(20), சோழிங்கநல்லூரைச் சேர்ந்த அரவிந்த்(21), பாலவாக்கத்தைச் சேர்ந்த ரோஹின்(21) ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையிலடைத்தனர்.