தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது! - போக்சோ

சிவகங்கை: சிங்கம்புனரி அருகே பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

By

Published : Jul 9, 2019, 9:21 PM IST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி அருகே, சூரக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் கோவில்பட்டியைச் சேர்ந்த பத்து வயது சிறுமி 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

பிடிபட்ட குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை

வழக்கம்போல் இன்று சிறுமி பள்ளிக்கு சைக்கிளில் சென்றபோது சூரக்குடி என்ற இடத்தில் குமார் என்ற இளைஞர் சிறுமியிடம் அன்பாகப் பேசுவது போல் நடித்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது சிறுமி சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ளவர்கள் வருவது தெரிந்துகொண்டு குமார் தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய குமாரை காவல்துறையினர் அய்யம்பட்டி என்ற இடத்தில் வைத்து பிடித்தனர். பிடிபட்ட அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிங்கம்புனரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details