தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சீர்காழி இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்! - சீர்காழி கொள்ளை வழக்கு

சீர்காழி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில், நான்காவது குற்றவாளியான கருணாராம் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

sirkazhi double murder acquit no 4 surrendered
sirkazhi double murder acquit no 4 surrendered

By

Published : Jan 29, 2021, 8:57 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தங்க வியாபாரி வீட்டில் இருவரை கொலைசெய்து கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 17 கிலோ தங்க நகைகள், இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ரமேஷ், மனிஷ், கருணாராம் ஆகியோர் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் நேற்று (ஜன. 28) நிலைதடுமாறி கீழே வழுக்கி விழுந்ததில் அவர்களது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த கொலை வழக்கில் நான்காவது குற்றவாளியாக கருணாராம் என்பவர் கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படு, 15 நாள் நீதிமன்ற காவல் மற்றும் நாகப்பட்டினம் சிறையில் அடைக்க விரைவு நீதிபதி அமிர்தம் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சீர்காழி கொள்ளை வழக்கு: காவல் நிலையத்தில் வழுக்கி விழுந்த குற்றவாளிகளுக்கு மாவுகட்டு!

ABOUT THE AUTHOR

...view details