தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

இளம்பெண்கள் வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட விவகாரம்: காணொலி ஆதாரத்துடன் விளக்கிய அனிதா குப்புசாமி! - Singer Anitha kuppusamy news

சென்னை: இளம்பெண்களை வீட்டில் அடைத்துவைத்து மிரட்டுவதாக புஷ்பவனம் குப்புசாமி மீது அளித்த புகாருக்கு மறுப்புத் தெரிவித்து, சிசிடிவி ஆதாரங்களுடன் அனிதா குப்புசாமி விளக்கம் அளித்துள்ளார்.

வீடியோ ஆதாரம் வெளியிட்ட அனிதா குப்புசாமி!
வீடியோ ஆதாரத்துடன் விளக்கிய அனிதாவீடியோ ஆதாரத்துடன் விளக்கிய அனிதா குப்புசாமி! குப்புசாமி!

By

Published : Dec 9, 2020, 8:04 AM IST

சென்னை அபிராமபுரம் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் தனது இரண்டு மகள்கலை அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபல திரைப்படப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் அலுவலகத்தில் பணி அமர்த்தியதாகவும், அவர்களுக்கு மாத சம்பளம் 8000 ரூபாயும், ஞாயிறன்று பணிபுரிந்தால் 300 ரூபாய் தருவதாகவும் கூறி வேலைக்குச் சேர்த்ததாக கூறினார்.

பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 6) அன்று வேலை பார்த்ததற்கு இளம்பெண்களுக்கு 200 ரூபாய் கொடுத்து புஷ்பவனம் ஏமாற்றியதாகவும், வெளியில் கூறி புஷ்பவனம் குப்புசாமியின் பெயரை அவமானப்படுத்தியதால் இளம்பெண்களை வீட்டிலேயே அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவதாகவும் அபிராமபுரம் காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் தாய் ஜெயந்தி புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக புஷ்பவனம் குப்புசாமியின் மனைவியும், பிரபல பாடகருமான அனிதா குப்புசாமி மறுத்து சிசிடிவி ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “அந்த இரு பெண்களும் நான்கு நாள்களுக்கு முன்பு என்னை அணுகி மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகக் கூறி பணியில் சேர்ந்தனர்.

மாத வருமானம் 8000 ரூபாயும் ஞாயிற்றுக்கிழமை பணிபுரிந்தால் கூடுதலாக 200 ரூபாய் தருவதாகவும் தெரிவித்துதான் பணிக்குச் சேர்த்தனர். புதிதாகப் பணிக்கு சேர்வோருக்கு ஞாயிறன்று பணிபுரிந்தால் 200 ரூபாயும், பழைய பணியாளர்களுக்கு 300 ரூபாய் வழங்கிவருவது வழக்கம்” என்றார்.

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 06) அன்று தான் நிகழ்ச்சிக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குச் சென்றுவிட்டதாகவும், அப்போது தனது மகள் அந்த இளம்பெண்களுக்கு 200 ரூபாய் கொடுத்து அனுப்பியபோது கோபத்துடன் சென்று சிறிது நேரத்தில் அவரது தாய் ஜெயந்தியுடன் வந்து ஆபாசமான வார்த்தைகளால் ஊழியர்கள் மற்றும் தனது மகளைத் திட்டியதாகவும், மேலும் குடிபோதையில் இருந்த சில ரவுடிகளை வரவழைத்து ஊழியர்களை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ ஆதாரம் வெளியிட்ட அனிதா குப்புசாமி!

இதனால் நேற்று (டிச. 08) அந்த இளம்பெண்களை அனிதா குப்புசாமி வீட்டிற்கு அழைத்து சம்பள பாக்கி வழங்கிவிட்டு, தனது வீட்டிற்கு வந்து மிரட்டிய ரவுடிகளை உடனே வரவழைக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டை விட்டு செல்ல முடியாது எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உடனே அபிராமபுரம் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு உதவி ஆய்வாளர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். அதற்குண்டான சிசிடிவி ஆதாரங்களும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அந்த இளம்பெண்கள் அவதூறு பரப்புவதற்காகவே திட்டமிட்டு செய்துள்ளதாகவும், உடனே அந்த இளம்பெண்கள், தாய் ஜெயந்தி, மிரட்டிய ரவுடிகள் மீது காவல் துறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க...பிரபல பாடகர் வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட பெண்கள்: காவல் துறையில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details