தென்காசி: பழக்கடையில் திருடச்சென்றவர் பணம் குறைவாக இருந்ததால் பழங்களையும் சேர்த்து திருடிச்சென்ற கண்காணிப்புப் படக்கருவியின் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கீழ அழகு நச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக். இவர் பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்றவர் எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு (செப். 30) சங்கரன்கோவில்- கழகுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் கார்த்திக்கைப் பிடித்து விசாரணை செய்தனர்.