நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ். அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரும், நாமக்கல் பொன்விழா நகர் பகுதியை சேர்ந்த மாற்று திறனாளியான நரேஷ் குமார் என்பவரும் நண்பர்கள். இவர்கள் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலும் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நரேஷ்குமார் மூலமாக பலருக்கு தினேஷ் 30 லட்சம் கடன் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு எவ்விதமான வட்டியையோ, அசல் தொகையையோ கொடுக்காத நிலையில் நரேஷ் குமாருக்கும் தினேஷுக்கும் கடந்த 4ஆம் தேதி வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
தகராறு முற்றிய நிலையில் நரேஷ்குமார், தான் வைத்திருந்த கத்தியால் தினேஷை குத்த முயல அதிலிருந்து தப்பித்த தினேஷ் அதே கத்தியை பிடுங்கி நரேஷ்குமாரை குத்தி கொலை செய்து அவரது வீட்டிற்குள்ளேயே புதைத்து விட்டார்.