சென்னை நெற்குன்றம் பகுதியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை, இறைச்சி வாங்கிவருமாறு அவரது தாயார் கூறியுள்ளார். இதையடுத்து, அதே பகுதியில் உள்ள இறைச்சிக் கடைக்குச் சென்ற சிறுமிக்கு, ஊழியர் ஒருவர் முத்தம் கொடுத்துவிட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதனால் மனமுடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு வந்து இது குறித்து தனது தாயிடம் கூறினார். பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாயார் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இறைச்சிக் கடை ஊழியரை கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது - நெற்குன்றத்தில் இறைச்சி வாங்கச் சென்ற 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை: நெற்குன்றத்தில் இறைச்சி வாங்கச் சென்ற 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
sexualharassament
அதன்பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சமீம் என்பது தெரியவந்தது.