சென்னை பெரம்பூர் பகுதியில் வாழ்ந்து வரும் திருமணமான பெண் ஒருவர், செம்பியம் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்புகாரில், ” எங்கள் வீட்டின் உரிமையாளர் பெயர் கண்ணன். இவர் காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று குளித்து விட்டு நான் வீட்டிற்குள் சென்ற போது, கண்ணன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, தகாத முறையில் நடக்க முயற்சித்தார்.
இதனால் நான் பயந்து அருகில் இருந்த மற்றொரு வீட்டிற்குள் ஓடி ஒளிந்து விட்டேன். பின்னர் எனது கணவர் வந்தவுடன் நடந்ததைக் கூறினேன்.