திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ - கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஆம்பூரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் இவர் நேற்றிரவு (செப்டம்பர் 3) பணிக்குச் சென்றுள்ளார்.
ஷூ தொழிற்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை கொள்ளை! - Seven savaren gold jewellery robbed in thiruppattur
திருப்பத்தூர் : ஆம்பூரில் தனியார் ஷூ தொழிற்சாலையில் ஊழியர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷூ தொழிற்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை கொள்ளை !
வழக்கம்போல இன்று (செப்டம்பர் 4) காலை வீடு திரும்பிய சுரேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 7 சவரன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சுரேஷ் ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Sep 4, 2020, 10:51 PM IST