சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர், ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புழல் சிறைச்சாலையில் இரவுப் பணியாற்றி விட்டு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத இருவர் நாராயணனின் செல்ஃபோனை பறித்து தப்பியோடினர்.
ஆயுதப்படை காவலரின் செல்ஃபோனை பறித்த பலே ஆசாமிகள்! - Seized the cell phone of the Armed Police
சென்னை: புழல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலரின் செல்ஃபோனை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
cell phone Seized
இதுகுறித்து, புழல் காவல் நிலையத்தில் நாராயணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 500க்கும் மேற்பட்ட கிளிகளைக் கடத்தியவர்கள் கைது!