தருமபுரி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி மாணவிகள் காலை பள்ளிக்குச் செல்லும்போதும், மாலையில் வீட்டுக்கு திரும்பும்போதும் இளைஞர்கள் கேலி கிண்டல் செய்வதும் சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
மாணவிகளை கேலி செய்த 8 பேர் கைது - schoolstudent
தருமபுரி: அரசு மகளிர் பள்ளி மாணவிகளை கேலி செய்த வாலிபர்களை மாறுவேடத்தில் கவனித்து காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான காவல் துறையினர் மாறுவேடத்தில் கண்காணித்தனர். பள்ளி மாணவிகளை கிண்டல் செய்தும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சாகசம் செய்தது என 11 பேரை காவல் துறையினர் பிடித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். இதில் மூவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். எட்டு வாலிபர்களை கைது செய்தனர்.
இளைஞர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டி பள்ளி மாணவிகள் மீது வாகனத்தை மோதியதால் 3 மாணவிகள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.