தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள செங்கண் பசவன் தலாவ் கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுமி பள்ளி விடுமுறை காரணமாக மாரண்டஅள்ளி அருகே உள்ள சிக்க மாரண்ட அள்ளிப் புதூரில் உள்ள தனது பாட்டி வீட்டியில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 19ஆம் தேதி இரவு 10 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து, எங்கு தேடியும் அம்மாணவி கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரித்ததில், செங்கண் பசுவன் தலாவ் பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் மகன் சந்தோஷ் (17) என்பவர்தான் அவரைக் கடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.