விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம்பூண்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன்முடி. அவரது மகன் திலீப்குமார் (15). இவர் தனது இருசக்கர வாகனத்தில் மாடாம்பூண்டி கூட்டு சாலை அருகில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, துருகத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்த திருமலா பாலிடெக்னிக் கல்லூரி வேன் மாடாம்பூண்டி கூட்டு சாலை அருகில் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திலீப்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.பின்னர் தகவலறிந்து அங்கு வந்த திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் மாணவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்துள்ளனர்.
விபத்தில் பள்ளி மாணவன் பலி பின்னர் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.