கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை அருகே வெள்ளாம்பி காணிமலை பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு பதிமூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். தற்பொழுது இந்தப் பெண் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது அந்த மாணவி இரண்டுமாத கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் அவரது பெற்றோர் கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவ்வூர் மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, கீறிப்பாறை காவல் நிலையத்தினர் வந்து விசாரித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த அண்ணன் உறவுமுறை கொண்ட சந்துரு(19) என்ற இளைஞன்தான் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.