சேலம் காந்திரோடு பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வந்தபோது, மையத்திற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலிருந்தவர்கள் தீ விபத்து குறித்து அருகிலுள்ள செவ்வாய்பேட்டை தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீயை அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர். இத் தீ விபத்தில் ஏடிஎம் மையத்தில் இருந்த நான்கு ஏசி மற்றும் மேற்கூரை எரிந்து சாம்பலாகின.