தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக முதற்கட்டமாக சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு காவலர், தலைமை காவலர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட 10 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
தனைத்தொடர்ந்து இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லி சிபிஐ அலுவலர் ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கைது செய்யப்பட்ட காவலர் முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பிணை கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி சிபிஐ விசாரணை எந்த நிலையில் உள்ளது எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பினார்.