தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பிரபல நகை கடையில் திருட முயன்ற பெண் கைது - chennai latest news

சென்னை: பிரபல நகை கடையில் தங்க மோதிரத்தை திருட முயன்ற பெண்னை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

saravana-store-cheating-issue
saravana-store-cheating-issue

By

Published : Sep 25, 2020, 5:25 PM IST

தி.நகரில் செயல்பட்டு வரும் எலைட் சரவணா நகை கடையில் நேற்று (செப்.24) மாலை பெண் ஒருவர் தங்க மோதிரம் வாங்குவதாக கூறி விரலில் மோதிரத்தை மாட்டி பார்த்துள்ளார். பின்பு டிசைன் சரியில்லை என ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த பித்தளை மோதிரத்தை கடை ஊழியர்களிடம் கொடுத்துள்ளார். இவர் மோதிரத்தை மாற்றி கொடுக்கிறார் என கண்டறிந்த கடை ஊழியர்கள் சோதனை செய்த போது பித்தளை மோதிரத்தை கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கடை ஊழியர்கள் அவரை மாம்பலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது அவர் பூந்தமல்லியைச் சேர்ந்த செல்வி(50) என்பதும், இவர் மீது பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாய்பாபா கோயில் பூட்டை உடைத்து திருட்டு

ABOUT THE AUTHOR

...view details