சேலம் இரும்பாலை சாலையிலுள்ள சித்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அதே பகுதியில் ஆர்.ஆர். ஜூவல்லரி நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்(நவ.1) வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற அவர். வழக்கம்போல நேற்று(நவ.2) காலை 8 மணிக்கு கடையை திறக்க ராஜா வந்துள்ளார்.
அங்கு ஷட்டரில் இருந்த இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
இதுகுறித்து இரும்பாலை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.