நீதிமன்ற கட்டடத்தின் மாடியிலிருந்து குதித்து குற்றவாளி தற்கொலை! - புதுடெல்லி
புதுடெல்லி: நகை பறிப்பு வழக்கில் குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, காவல்துறையினரின் பிடியை மீறி ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளி தற்கொலை
நகை பறிப்பு குற்றத்தில் சிக்கிய நபரை நீதிமன்றத்தில் முன்னிறுத்த காவல்துறையினர் பாதுகாப்பாகக் கொண்டுவந்தனர். செல்லி சகெட் நீதிமன்ற வளாகத்தின் ஐந்தாவது தளத்தில் நீதிபதியின் முன், அவரை முன்னிறுத்த அழைத்து வந்தபோது சற்றும் எதிர்பாராத சமயத்தில் காவலர்களின் பிடியிலிருந்து தப்பித்த குற்றவாளி, ஐந்தாவது தளத்திலிருந்து ஜன்னல் கதவு வழியாகக் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது.