அரும்பாக்கம் மேற்கு கல்லூரி சாலைப் பகுதியில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை செனாய் நகரைச் சேர்ந்த மோகன் (45) என்பவர் நிர்வகித்துவருகிறார்.
இவர் நேற்று இரவு வழக்கம்போல் கோயில், அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, இன்று காலை கோயிலை திறக்கவந்துள்ளார். அப்போது, கோயில் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்த மோகன், உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்களில் இருந்த ஆறு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய், மடிக்கணினி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.